‘புதிய விடியலும், சிறப்பான எதிர்காலமும் காத்திருக்கிறது’ - விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
“நமது பயணத்தில் சிறிய பின்னடைவைத்தான் சந்தித்திருக்கிறோம்; புதிய விடியலும், சிறப்பான எதிர்காலமும் காத்திருக்கிறது” என்று விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
பெங்களூரு,
சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர், நேற்று அதிகாலையில் அதன் மேற்பரப்பில் தரை இறங்குகிறபோது, தகவல் துண்டிப்பு ஏற்பட்டது.
இதனால் திட்டமிட்டபடி அது தரை இறங்க முடியாமல் போய் விட்டது.
இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை பார்வையிட பெங்களூரு இஸ்ரோ மையத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார். புதிய நம்பிக்கை விதைகளை அவர்களின் மனங்களில் விதைக்கிற வகையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது விஞ்ஞானிகளால் நாடு பெருமிதம் அடைகிறது. அவர்கள் தங்களால் இயன்றவரையில் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் எப்போதுமே நாட்டுக்கு பெருமிதம் தேடித்தந்திருக்கிறார்கள். இந்த தருணங்கள் துணிச்சலுடன் இருக்க வேண்டிய தருணங்கள். நாம் அப்படியே இருப்போம்.
இந்த நாடு உங்களுடன் இருக்கிறது. நானும் உங்களுடன் இருக்கிறேன். உங்கள் முயற்சி, மதிப்புக்குரியது. இந்த பயணமும் அப்படிப்பட்டதுதான்.
இந்திய தாய் திருநாட்டின் வெற்றிக்காக நீங்கள் உழைத்து வருகிறீர்கள். போராடுகிறீர்கள். இந்திய தாய் பெருமிதம் அடைவதற்காக அர்ப்பணிப்போடு உறுதியுடன் செயல்படுகிறீர்கள்.
உங்கள் உணர்வையும், மனச்சோர்வையும் என்னால் நேற்றிரவு உணர முடிந்தது. விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பினை இழந்தபோது, நான் உங்களோடுதான் இருந்தேன். இப்போது பல கேள்விகள் விடையின்றி இருக்கின்றன. ஆனால் நிச்சயமாக நீங்கள் அந்த விடைகளை கண்டறிவீர்கள். அதன் பின்னால் கடினமான பணி இருக்கிறது என்பதை நான் அறிவேன்.
நமது பயணத்தில் ஒரு சிறிய பின்னடவைத்தான் நாம் சந்தித்திருக்கிறோம். இது நமது இலக்கை அடைவதற்கான ஆர்வத்தையும், ஊக்கத்தையும் சீர்குலைத்து விடாது.
நமது உறுதி இப்போது இன்னும் வலுப்பட்டுள்ளது.
நமது சகோதர, சகோதரிகளான விஞ்ஞானிகளுடன் ஒட்டுமொத்த நாடும் நேற்று கண்விழித்திருந்தது. நாம் நிலவின் மேற்பரப்புக்கு மிக நெருக்கமாக வந்து விட்டோம். இந்த முயற்சி பெரும் பாராட்டுக்கு உரியது.
நாம் நமது விண்வெளி திட்டத்தால், விஞ்ஞானிகளால் பெருமிதம் அடைகிறோம். அவர்களது கடினமான உழைப்பும், மன உறுதியும் நமது மக்களுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. அவர்களது புதுமையான முயற்சிகளின் பலனாக ஏராளமான மக்கள் சிறந்த சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சிறப்பான வாழ்க்கைத்தரத்தை பெற முடிந்துள்ளது.
மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தக்க பெருமிதமிக்க எத்தனையோ தருணங்கள் இருக்கின்றன என்பதை இந்தியா அறியும்.
விண்வெளித்திட்டத்தைப் பொறுத்தமட்டில், இன்னும் சிறப்பான தருணங்கள் வர உள்ளன. கண்டறியப்படுவதற்கான புதிய எல்லைகளும், இடங்களும் இருக்கின்றன. அதற்கான தருணத்தை நாம் உருவாக்குவோம். வெற்றியின் புதிய உச்சங்களை நாம் தொடுவோம்.
நமது விஞ்ஞானிகளுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தியா உங்களுடன் இருக்கிறது. உங்களுடைய உண்மையான செயல் மூலமாக இதுவரை யாரும் சென்றிடாத இடத்துக்கு சென்றிருக்கிறீர்கள்.
உங்களால் முடிந்தவரைக் கும் நெருங்கிப்போய் விட்டீர்கள். உங்களின் முயற்சி மதிப்பு வாய்ந்தது என்பதை என்னால் பெருமிதத்துடன் கூற இயலும். இந்த பயணமும் அப்படிப்பட்டதுதான்.
நமது குழுவினர் கடுமையாக உழைத்தார்கள். நெடிய தூரம் பயணித்தார்கள். அந்த அனுபவங்கள், நம்முடனே கூட எப்போதும் இருக்கும். இன்று நாம் கற்பது, நம்மை இன்னும் வலிமையாக்கும். எதிர்காலத்தை சிறப்பாக்கும்.
நமது விண்வெளி விஞ்ஞானிகளின் குடும்பங்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர்களது அமைதியும், மதிப்புமிக்க ஆதரவும் நமது முயற்சியில் மாபெரும் பலமாக உள்ளது.
சகோதர, சகோதரிகளே, மீண்டெழுவதும், விடாப்பிடியுடன் இருப்பதும் நமது பண்பாட்டின் மையம் ஆகும். புகழ்மிக்க நமது வரலாற்றில், நம்மை நசுக்கிய தருணங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் நாம் ஒருபோதும் முயற்சியை கைவிட்டதில்லை. நமது நாகரிகம் உயர்ந்து நிற்பதற்கு இதுதான் காரணம்.
வரலாற்று சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். இஸ்ரோவையும் தோல்விகள் துவளச்செய்து விடாது என்பதை நான் அறிவேன்.
இதோ, புதிய விடியல் தோன்றும். எதிர்காலம் சிறப்பாகும். விளைவுகளை பற்றி கவலைப்படாமல், நாம் முன்னேறிச்செல்வோம். அதுதான் நமது வரலாறு.
நான் உங்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறேன். எனது கனவுகளை விட உங்கள் கனவுகள் மேலானவை. உங்கள் நம்பிக்கையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
உங்களிடம் இருந்து உத்வேகம் பெறுவதற்கு உங்களை நான் சந்தித்தேன். நீங்கள் உத்வேக கடல். நீங்கள் உத்வேகத்தின் வாழும் சான்று.
உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story