காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 12:15 AM IST (Updated: 8 Sept 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்பு அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொலைபேசி, இணையதள சேவை தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பை இழந்தனர். அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.

இந்த நிலையில் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் முக்கியமான சாலைகள் மூடப்பட்டன. அங்கு ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். லால் சவுக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

மருத்துவ பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு செல்லக்கூட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். நாளை மறுநாள் மொகரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story