இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்


இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2019 12:55 AM IST (Updated: 9 Sept 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தை மையமாக கொண்டு நேற்று காலை 5.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் நேற்று காலை 8.04 மணியளவில் சம்பா எல்லை பகுதியை ஒட்டியுள்ள காஷ்மீர் பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

இந்த 2 இடங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல்கள் இல்லை.

Next Story