நாடு முழுவதிலும் இருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம்; அமித் ஷா பரபரப்பு பேச்சு


நாடு முழுவதிலும் இருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம்; அமித் ஷா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 9 Sep 2019 10:42 AM GMT (Updated: 9 Sep 2019 10:42 AM GMT)

நாடு முழுவதிலும் இருந்து அனைத்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம் என மத்திய மந்திரி அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கவுகாத்தி,

அசாமின் கவுகாத்தி நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ள வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் 4வது கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, அனைத்து சட்டவிரோத குடியேறிகளை அசாமில் இருந்து வெளியேற்றுவதுடன் நாடு முழுவதிலும் இருந்து வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்தடுத்து நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், வடகிழக்கு பகுதியானது நாட்டில் இருந்து தனித்து விடப்பட்டது என்று அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.  காங்கிரஸ் கட்சி கவனம் எடுத்து கொள்ளாத நிலையில் இந்த பகுதியில், தீவிரவாதம் நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடைந்து இருந்தது.

பிரித்து ஆளக்கூடிய கொள்கையில் காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Next Story