உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா நிர்வாகி சுட்டுக்கொலை


உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா நிர்வாகி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 Sept 2019 1:11 AM IST (Updated: 10 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஹாபூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர், வட்டார பா.ஜனதா செயலாளராக பணியாற்றி வந்தார். ஒரு கல்லூரியில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை, ஹாபூர் நகரின் மையப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் ராகேஷ் சர்மா உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு பா.ஜனதா தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story