மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: வெளிநாடு வாழ் இந்திய மாணவியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பான, வெளிநாடு வாழ் இந்திய மாணவியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை எழுத ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் பலர் ஆங்கிலத்தை தனியாக ஒரு பாடமாக படிப்பது இல்லை. இதனால் அவர்கள் நீட் தேர்வு எழுத தகுதி இல்லாதவர்களாகி விடுகின்றனர்.
எனவே இந்த விதியை தளர்த்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மலேசியா வாழ் இந்திய மாணவி விம்ஷிகா என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Tags :
Next Story