தேசிய செய்திகள்

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல் + "||" + Contacts with Vikram Lander fade away - ISRO senior official reported

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்குகிறது - இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல்
விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்கி வருவதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

நிலவின் தென் துருவப்பகுதியில், கடந்த 7-ந் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலவுக்கு 2.1 கி.மீ. அருகே வந்தபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.


இருப்பினும் விக்ரம் லேண்டர், தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் விழுந்து கிடப்பது தெரிய வந்தது. இதை சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தெர்மல் படம் எடுத்து அனுப்பியது.

அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை பெங்களூரு அருகே அமைந்துள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் தொடர்ந்து ரேடியோ சிக்னல்களை அனுப்பி வருகிறது.

விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இருக்கிற பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் ஆயுள்காலம் 14 நாட்கள்தான். ஏற்கனவே இன்றுடன் 8 நாட்கள் முடிகிறது. இன்னும் 6 நாட்கள்தான் மீதி உள்ளன. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மங்கிப்போய் விட்டது.

இதை இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது படிப்படியாக கடினமாகி வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திலும் அதன் பேட்டரி சக்தியை இழந்து வருகிறது. அது இயங்குவதற்கு சக்தி இல்லாமல் போய்விடும். கடந்து செல்கிற ஒவ்வொரு நிமிடமும், நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. எனவே விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்பு மிக மிக குறைந்து விட்டது” என தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ட்விட்டரில் வைரல் புகைப்படம் விக்ரம் லேண்டர் அல்ல! இது அப்பல்லோ 15 லேண்டிங் தளமாகும்
ட்விட்டரில் விக்ரம் லேண்டர் புகைப்படம் என வைரலாகி உள்ளது போலியானது. இது அப்பல்லோ 15 லேண்டிங் தளமாகும்.
2. விக்ரம் லேண்டர் உடையவில்லை, சாய்ந்த நிலையில் உள்ளது - இஸ்ரோ தகவல்
விக்ரம் லேண்டர் உடையவில்லை, சாய்ந்த நிலையில் உள்ளது. விரைவில் அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போனது பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் சொன்னது என்ன?
விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போனது பற்றி பல்வேறு வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அது பற்றிய ஒரு பார்வை இது:-
4. ‘சந்திரயான்-2’ திட்டத்தின் முக்கிய நிகழ்வு: நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் நாளை தரை இறங்குகிறது
‘சந்திரயான்-2’ திட்டத்தின் முக்கிய நிகழ்வு நாளை அதிகாலையில் நடக்கிறது. அப்போது விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரை இறங்கும் என்று இஸ்ரோ கூறி உள்ளது.