பீகாரில் 2 இளைஞர்களை அடித்துக்கொன்ற கிராம மக்கள்


பீகாரில் 2 இளைஞர்களை அடித்துக்கொன்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 16 Sept 2019 1:00 AM IST (Updated: 16 Sept 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் 2 இளைஞர்களை கிராம மக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பக்சார்,

மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்து வட மாநிலங்களில் கும்பல் கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் பீகாரில் நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்களை கிராம மக்கள் அடித்து கொன்றனர்.

பீகாரின் பக்சார் மாவட்டத்துக்கு உட்பட்ட குர்தியா கிராமத்தை சேர்ந்த பிரதீப் ஷா (வயது 35), பர்குவா கிராமத்தை சேர்ந்த யோகேந்திர பாண்டே (25) ஆகிய 2 இளைஞர்கள் குர்தியா கிராமத்தில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்களே அவர்களை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story