மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் : மராட்டிய முதல் மந்திரி


மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் : மராட்டிய முதல் மந்திரி
x
தினத்தந்தி 15 Sep 2019 7:17 PM GMT (Updated: 15 Sep 2019 7:17 PM GMT)

மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை, 

மராட்டியத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது இரண்டாவது கட்ட மகாஜனதேஷ் யாத்திரையை தொடங்கி உள்ளார்.  இதற்கு மத்தியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன்.மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக வெற்றி பெற்று நான் மீண்டும் முதல் மந்திரியாவேன்” என்றார்.  

காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய பட்னாவிஸ் கூறுகையில், ”காங்கிரஸ் தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். குறிப்பாக ராகுல் காந்தி மீது அக்கட்சியினர் நம்பிக்கை இழந்துவிட்டனர். தனது பேச்சால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ளும் ஆழமான திறன் அவரிடம் இல்லை. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டது.  தனது வார்த்தைகளில் ராகுல் காந்தி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

மராட்டிய காங்கிரஸ் கடுமையான குழப்பத்தில் உள்ளது. காங்கிரஸில் ஒருவரை பற்றி ஒருவருக்கு தெரியாது. இந்த சூழலில், அவர்கள் எப்படி எங்களுக்கு எதிராக போட்டியாக வர முடியும்” என்றார். 

Next Story