பணியிடங்களில் பாலியல் தொல்லை குறித்து மந்திரிகள் குழு ஆலோசனை


பணியிடங்களில் பாலியல் தொல்லை குறித்து மந்திரிகள் குழு ஆலோசனை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:00 AM IST (Updated: 17 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

பணியிடங்களில் பாலியல் தொல்லை குறித்து மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி,

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆராய முந்தைய மோடி ஆட்சிக்காலத்தில், ராஜ்நாத்சிங் தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. மோடி அரசு மீண்டும் அமைந்த பிறகு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை தலைவராக கொண்டு குழு மாற்றி அமைக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ரமேஷ் பொக்ரியால், ஸ்மிரிதி இரானி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுப்பது பற்றியும், அதற்கான சட்டங்களை வலுப்படுத்துவது பற்றியும் குழு ஆலோசனை நடத்தியது.

மேலும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, யோசனைகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story