நேரு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக எம்.எல்.ஏ.
நேரு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சாய்னி வருத்தம் தெரிவித்தார்.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ. விக்ரம் சாய்னி. பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போதே ஒரு ஆங்கிலப் பெண்ணுடன் நேரு நெருக்கமாக இருந்தார் என்றும் ஒட்டுமொத்தக் குடும்பமே அப்படிப்பட்டதுதான் என்றும் கூறி, ராஜீவ் காந்திகூட இத்தாலியில்தான் திருமணம் செய்துகொண்டார் என்று கூறினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸார் சாய்னியைத் தாக்கி கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தனது கருத்துக்கு எம்.எல்.ஏ. விக்ரம் சாய்னி வருத்தம் தெரிவித்துள்ளார். நான் பயன்படுத்திய வார்த்தை யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். இது மீண்டும் நடக்காது'' என்றார்.
Related Tags :
Next Story