மும்பையில் கனமழை எச்சரிக்கை; அனைத்து பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
மும்பையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மும்பை,
மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்தும் சிவப்பு நிற எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்) விடப்பட்டு உள்ளது.
இதேபோன்று ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.
இதனிடையே, கல்வி துறை மந்திரி ஆஷிஷ் ஷெலார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மகாராஷ்டிர அரசு எடுத்துள்ள முடிவின்படி, மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள் மற்றும் இளநிலை கல்லூரிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை முன்னிட்டு இன்று விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்திடுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
மும்பையில் நாளையும் (வெள்ளி கிழமை) கனமழை பெய்யும் என்றும், ராய்காட்டில் மிக மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story