சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறிய சட்ட மாணவி, நண்பர்கள் மீது வழக்கு - மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு
சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறிய சட்ட மாணவி, நண்பர்கள் மீது மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேசத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்த் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது அவர் மீது கற்பழிப்பு புகார் கூறிய சட்ட மாணவி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது மிரட்டி பணம் பறித்ததாக கூறும் சட்டப்பிரிவுகளின்கீழ் சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவு செய்துள்ளது.
சட்ட மாணவி தவிர்த்து மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு பற்றி சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறிய சட்ட மாணவி கூறுகையில், “சின்மயானந்திடம் இருந்து நான் தப்பிப்பதற்கு உதவிய நண்பர்கள் என் பெயரை பயன்படுத்திக்கொண்டார்களா என்பது எனக்கு தெரியாது. நான் சுமத்தியுள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டை நீர்த்துப்போகச்செய்யும் நோக்கத்தில்தான் இந்த நாடகம் எல்லாம் அரங்கேற்றப்படுகிறது என நான் கருதுகிறேன்” என கூறினார்.

Related Tags :
Next Story