கர்ப்பிணிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குஜராத் கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலை வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் வெடித்தபோது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பனோ என்ற பெண், கூட்டு கற்பழிப்புக்கு உள்ளானார். அவருடைய உறவினர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை தனிக்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும், அரசு வீடும் வழங்குமாறு குஜராத் மாநில அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அதை குஜராத் அரசு செயல்படுத்தவில்லை. ஆகவே, பில்கிஸ் பனோ சார்பில் குஜராத் அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தங்கள் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என்று குஜராத் அரசுக்கு நேற்று கண்டனம் தெரிவித்தனர். இழப்பீடு, வேலை, வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Tags :
Next Story