மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 1 Oct 2019 11:07 AM IST (Updated: 1 Oct 2019 11:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் உயர்வடைந்து காணப்பட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 250.06 புள்ளிகள் உயர்ந்து 38,917.39 புள்ளிகளாக காணப்பட்டது.  இவற்றில் வங்கி பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 69.30 புள்ளிகள் உயர்ந்து 11,543.75 புள்ளிகளாக காணப்பட்டது.

மும்பை பங்கு சந்தையில் யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகள் ஏற்ற நிலையில் காணப்பட்டன.

இதேவேளையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை வர்த்தகம் தொடங்கியபொழுது 10 காசுகள் உயர்ந்து ரூ.70.77 ஆக இருந்தது.

Next Story