சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன்


சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன்
x
தினத்தந்தி 1 Oct 2019 11:00 PM IST (Updated: 1 Oct 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில், கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

புதுடெல்லி,

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. ராஜீவ்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், ராஜீவ் குமாரின் ஜாமீன் முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் அவர் தலைமறைவானார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கைதுக்கு முந்தைய ஜாமீன் கேட்டு அவர் மனு  செய்திருந்தார். அது விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ராஜீவ்குமாருக்கு இன்று முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ராஜீவ்குமார் கொல்கத்தாவை விட்டு வெளியேறக்கூடாது என்றும், ராஜீவ்குமாரை  சி.பி.ஐ. கைது செய்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் என 2 பிணைத் தொகை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜீவ்குமாரை விசாரணைக்கு வரவழைப்பதாக இருந்தால், 48 மணி நேரத்திற்கு முன்பாகவே சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் சி.பி.ஐ.க்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Next Story