காஷ்மீரில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 பேர் காயம்


காஷ்மீரில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள்  தாக்குதல்: 10 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Oct 2019 12:51 PM IST (Updated: 5 Oct 2019 12:51 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் தெற்கு பகுதி நகரமான அனந்தநாக்கில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த பகுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.  

துணை ஆணையர் அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால், அந்தக்குண்டுகள் குறிதவறி சாலையோரத்தில் விழுந்து வெடித்தது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், குண்டுகள் வெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குண்டு வீச்சு சம்பவத்தையடுத்து தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 

Next Story