இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இடையே இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று புதுடெல்லியில் உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் நடைபெற்ற வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்ட அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி செய்வது உள்ளிட்ட 3 திட்டங்களை பிரதமர் மோடியும், ஷேக் ஹசினாவும் தொடங்கி வைத்தனர்.
அதன் பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்குமான நல்லுறவு அதிகரித்து வருவதாகவும் இந்த நல்லுறவு இருநாட்டு மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஓராண்டு காலத்தில் இருநாடுகளுக்கு இடையில் 9 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று தொடங்கப்பட்ட திட்டங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story