உத்தரபிரதேசத்தில் போலி சிமெண்டு தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு


உத்தரபிரதேசத்தில் போலி சிமெண்டு தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2019 2:18 AM IST (Updated: 6 Oct 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் போலி சிமெண்டு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நொய்டா,

உத்தரபிரதேசத்தில், கலப்பட சிமெண்டு விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், நொய்டாவில் 3 தொழிற்சாலைகளிலும், காசியாபாத்தில் ஒரு தொழிற்சாலையிலும் கலப்பட போலி சிமெண்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு இருந்து மூட்டை மூட்டையாக போலி சிமெண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 4 டிராக்டர்கள், சிமெண்டு பொருட்கள் மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட போலி சிமெண்டுகள், ஏ.சி.சி, பான்குர் போன்ற பல முக்கிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட சிமெண்டுகளில் சாம்பல், தூசி, மணல் போன்றவை கலப்படத்திற்காக பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட கும்பல் தொடர்ச்சியாக இந்த குற்றத்தில் ஈடுபட்டு போலி சிமெண்டுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றி இருக்கின்றனர்” என்றார்.

Next Story