மெகபூபா முப்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று ஆலோசனை


மெகபூபா முப்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மெகபூபா முப்தியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கவர்னர் சத்யபால் சிங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் மெகபூபா முப்தியை இன்று (திங்கட் கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Next Story