பருவநிலை மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுத்தது ஏன்? - மத்திய அரசு விளக்கம்


பருவநிலை மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுத்தது ஏன்? - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 10 Oct 2019 1:00 AM IST (Updated: 10 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

பருவநிலை மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு கடைசி நேரத்தில் மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர், மத்திய அரசு மீது குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் கூறுகையில், ‘டென்மார்க்கில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாடு, மேயர்கள் மட்டத்திலானது. அதனால்தான் முதல்-மந்திரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தை சேர்ந்த மந்திரி ஒருவர் இதில் பங்கேற்று உள்ளார்’ என்று தெரிவித்தார்.

Next Story