பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த 2 கொள்ளையர்கள் என்கவுண்ட்டர் மூலம் பிடிபட்டனர்
பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த 2 கொள்ளையர்களை என்கவுண்ட்டர் மூலம் போலீசார் பிடித்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 பேரை டெல்லி தனிப்பிரிவு போலீசார் வழிமறித்தனர். உடனே, அந்த 2 பேரும், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில், 2 பேரும் காயத்துடன் பிடிபட்டனர். அவர்களின் பெயர்கள் அனில், அருண் என்று தெரிய வந்தது.
கடந்த மாதம், ஒரு பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்தபோது, அவர் கீழே விழுந்து காயமடைந்தார். அதில் ஈடுபட்டது, இவர்கள்தான் என்று தெரிய வந்தது. மேலும், டெல்லியில் 30 வழிப்பறி, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story