தேசிய செய்திகள்

"கோ பேக் மோடி" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள் + "||" + Pakistanis join Congress in trending GoBackModi as Chinese President Xi Jinping visits India

"கோ பேக் மோடி" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்

"கோ பேக் மோடி" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்
கோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
புதுடெல்லி

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, தமிழகம் வந்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை வரவேற்கும் வகையில் #TNwelcomesXiJinping என்ற ஹேஷ்டேக் மூலம் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தரப்பினர் #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

 #GoBackModi ஹேஷ்டாக்   மீண்டும் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளதால் இம்முறை இந்திய இறையாண்மைக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை விசாரணை தொடங்கி உள்ளது.

இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் அடையாளமாக #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடியை வரவேற்று தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மாமல்லபுரம் போன்ற வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் நடக்கும் சந்திப்பு தமிழகத்திற்கு பெருமை என்றும் இப்படி மோதல் போக்கை தொடர்வது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்றும் பலர் டுவீட் செய்து வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சியினர் கறுப்புக் கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் பகிரப்பட்டது. இந்த ஹேஷ்டேக் அப்போது இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

மோடி தமிழகம் வருகையின் போது எல்லாம் இது போன்று  #GoBackModi ஹேஷ்டாக்  உருவாக்கப்பட்டு  டிரெண்ட்டாகி வருவதால் இது குறித்து உளவுத்துரை விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. 

இதில்,பாகிஸ்தானை ச் சேர்ந்த சிலர் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து இந்த ஹேஷ்டாக்கை உருவாக்கி, ஒவ்வொரு முறையும் டிரெண்டிங் ஆக்கி வருவது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழ் மற்றும் தமிழகம் மீது அதீத பாசம் கொண்டிருப்பது போன்ற கருத்துக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர். #GoBackModi ஹேஷ்டாக்கை டிரெண்டிங் ஆக்கியது போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவான ஹேஷ்டாக்குகளையும் உருவாக்கி இவர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து  58 சதவீத டுவிட்டுகள் போடப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து குறைவான டுவிட்டுகளே, 2 சதவீதம் மட்டுமே தமிழ் டுவிட்டுகள், 23 சதவீத உருது டுவிட்டுகள் .

மோடி, தமிழகம் வரும் போது மட்டும் இத்தகைய ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்படுவதால், இதன் பின்னணியில் தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சி இருக்கலாம் என முதலில் உளவுத்துறை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு, திராவிட கொள்கை காரணமாக கூட அவர்கள் இத்தகைய ஹேஷ்டாக்கை உருவாக்கி இருக்கலாம் என சந்தேகித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியதில், இதன் பின்னணியில் பாகிஸ்தான்  இருப்பது தெளிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை
டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
3. ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
4. 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி, பிரேசில் புறப்பட்டு சென்றார் - ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பு
2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
5. டி.என். சேஷன் மறைவு வேதனை அளிக்கிறது; பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.