பூஷண் உருக்கு நிறுவனத்தின் ரூ.4,025 கோடி சொத்துகள் முடக்கம் - வங்கி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை


பூஷண் உருக்கு நிறுவனத்தின் ரூ.4,025 கோடி சொத்துகள் முடக்கம் - வங்கி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2019 4:00 AM IST (Updated: 13 Oct 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக, பூஷண் உருக்கு நிறுவனத்தின் ரூ.4,025 கோடி சொத்துகள் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூஷண் மின்சாரம் மற்றும் உருக்கு நிறுவனம், பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியது. ஆனால் அப்பணத்தை முறைகேடாக வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், ஒடிசா மாநிலத்தில் பூஷண் உருக்கு நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலை, எந்திரங்கள் உள்பட ரூ.4 ஆயிரத்து 25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. முடக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Next Story