ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2019 7:06 AM GMT (Updated: 16 Oct 2019 7:06 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில்  உள்ள  பசல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story