குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்; பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்


குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்; பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:23 PM IST (Updated: 16 Oct 2019 4:23 PM IST)
t-max-icont-min-icon

உலக பசி குறியீட்டு தரவரிசையை குறிப்பிட்டு, குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தும்படி பிரதமர் மோடியை கபில் சிபல் சாடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

உலகளவில் பசி மற்றும் ஊட்ட சத்து பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கு குறியீடு வழங்கும் அமைப்பொன்று வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டிற்கான உலக பசி குறியீட்டு தரவரிசை பட்டியலில் இந்தியா 102வது இடம் பிடித்துள்ளது.  மொத்தம் 117 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.  கடந்த 2018ம் ஆண்டு 95வது இடத்தில் இருந்த இந்தியா, தனது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை விட பின்தங்கி உள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞரான கபில் சிபல் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மோடி ஜி.  அரசியல் மீது குறைவாக கவனம் செலுத்துங்கள்.  குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்.  அவர்கள் நம்முடைய வருங்காலம்.  உலக பசி குறியீட்டில் இருந்து இந்தியா கீழிறங்கி உள்ளது.  கடந்த 2010ம் ஆண்டில் 95வது இடத்தில் இருந்தது.  2019ம் ஆண்டில் 102வது இடத்தில் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

நாட்டில் 93 சதவீத குழந்தைகள் குறைந்தபட்ச அளவு உணவை கூட பெறுவதில்லை என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் உலக பசி குறியீட்டில் 5 புள்ளிகளுக்கு குறைவாக பெற்று முதல் வரிசையில் இடம் பெற்று உள்ளன.

Next Story