காங்கிரஸ் பலவீனம் அடைந்ததனால் நாடக நிறுவனம் (பா.ஜ.க.) வெற்றி பெற்றுள்ளது; ஓவைசி பேச்சு
காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்ததனால் நாடக நிறுவனம் (பா.ஜ.க.) வெற்றி பெற்றுள்ளது என்று ஓவைசி கூறியுள்ளார்.
நல்கொண்டா,
தெலுங்கானாவை அடிப்படையாக கொண்டு அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி பேசும்பொழுது, இந்த நாடக நிறுவனம் (பா.ஜ.க.) வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து உள்ளது. போரிடும் உணர்வு அந்த கட்சிக்கு இல்லை. முடிவடைந்த நிலையில் அந்த கட்சி உள்ளது.
இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட சட்டம் (சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) ஆனது மோடி அரசால் கறை படிந்த நிலையிலும் மற்றும் கடுமையாகவும் ஆக்கப்பட்டபொழுது காங்கிரஸ் கட்சி எங்கிருந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்பொழுது, பயங்கரவாதம் என்ற பெயரில் பட்டியல் கொண்டு வரப்படும். அதில் சிலரது பெயர்கள் எழுதப்படும். அந்நபர் பயங்கரவாதி என அறிவிக்கப்படுவார்.
அவரது வாழ்வு அழிக்கப்படும். அவர் நீதிமன்றத்தினை அணுக முடியாது. நீதிமன்றம் அவரை பயங்கரவாதி என அறிவிக்கும். இதுபோன்ற சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story