முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் உடனே மசூதி கட்டமாட்டோம் - மனுதாரர்கள் அறிவிப்பு


முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் உடனே மசூதி கட்டமாட்டோம் - மனுதாரர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2019 8:59 PM GMT (Updated: 19 Oct 2019 8:59 PM GMT)

முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் உடனே மசூதி கட்டமாட்டோம் என மனுதாரர்கள் அறிவித்துள்ளனர்.

அயோத்தி,

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவரான மெகபூப் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் ஒருவேளை தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வந்தாலும் நாட்டில் இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைதியும், நல்லிணக்கமும் தொடருவதற்கே முன்னுரிமை வழங்கப்படும். உடனே நாங்கள் அந்த இடத்தில் மசூதி கட்டமாட்டோம். அந்த நிலத்தை சுற்றிலும் சுவர் மட்டும் கட்டுவோம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதுதொடர்பாக மற்ற மனுதாரர்களுடனும் கலந்தாலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தை மற்ற சில மனுதாரர்களான உள்ளூர் ஜமாத் தலைவர் உலாமா ஹிந்த் மற்றும் முகம்மது உமர் ஆகியோரும் வரவேற்றனர்.

Next Story