குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
குஜராத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆமதாபாத்,
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று காலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் காலை நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாகவும், அதன் மையப்பகுதி பன்ஸ்கந்தாவின் பலன்பூரில் இருந்து வடக்கு, வடமேற்கில் சுமார் 36 கி.மீ. அப்பால் மையம் கொண்டிருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Related Tags :
Next Story