பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை


பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2019 3:30 AM IST (Updated: 21 Oct 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாக்பூர்,

சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மராட்டிய மாநிலம் பாந்திரா மாவட்டம் சகோலி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

இதற்காக அவர் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். இந்த நிலையில் பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரை கூட்டத்தில் இருந்த மும்பையை சேர்ந்த 2 பேர் படம் பிடித்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர்களை பிடித்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார், அவர்களிடம் இருந்த போட்டோக்களையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story