கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்


கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்
x
தினத்தந்தி 23 Oct 2019 2:49 PM IST (Updated: 23 Oct 2019 2:49 PM IST)
t-max-icont-min-icon

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

புதுடெல்லி,

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமாரின் வீட்டில் கடந்த ஆண்டு நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி டி.கே.சிவகுமாரை கைது செய்தனர். 

தற்போது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிகே சிவக்குமார் ஜாமீன் கோரி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். டிகே சிவக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், அவருக்கு ஜாமீன் வழங்கியது. ரூ.25 ஆயிரம் சொந்தப்பிணையில் டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.


Next Story