காஷ்மீர் வானொலி பெயர் மாற்றம்: 53 ஆண்டுகளுக்கு முன்னரே கேள்வி எழுப்பிய வாஜ்பாய்
காஷ்மீர் வானொலி பெயர் மாற்றம் தொடர்பாக, 53 ஆண்டுகளுக்கு முன்னரே வாஜ்பாய் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
பிரசார் பாரதி நிறுவனத்தின் அனைத்து வானொலி நிலையங்களும், ‘ஆல் இந்திய ரேடியோ’ என அழைக்கப்பட்டு வந்த நிலையில், காஷ்மீர் மாநில வானொலி மட்டும், ‘ரேடியோ காஷ்மீர்’ என அழைக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 1966-ம் ஆண்டு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். மேலும் அந்த வானொலியின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அப்போதைய மத்திய அரசு, ‘ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு வானொலி நிலையங்கள் கடந்த 18 ஆண்டுகளாக ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த வானொலிக்கு இந்தியாவுக்கு வெளியே ஏராளமான நேயர்கள் உள்ளன. அவர்களிடையே இந்த பெயர் பிரபலமாக விளங்குகிறது. எனினும் அதன் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலிக்கிறோம்’ என்று தெரிவித்தது.
ஆயினும் காஷ்மீர் வானொலி தொடர்ந்து ரேடியோ காஷ்மீர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. தற்போது காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில், ரேடியோ காஷ்மீரின் பெயரை பிரசார் பாரதி நிறுவனம் மாற்றியது.
அதன்படி, காஷ்மீர் வானொலியும் இனிமேல் ‘ஆல் இந்திய ரேடியோ’ என்றே அழைக்கப்படும் என பிரசார் பாரதி நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளது. மேலும் ஸ்ரீநகர், ஜம்மு, லே வானொலி நிலையங்கள் முறையே ஆல் இந்திய ரேடியோ - ஸ்ரீநகர், ஜம்மு, லே என்று அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இதன் மூலம் வாஜ்பாயின் கேள்விக்கு 53 ஆண்டுகளுக்குப்பின் பதில் கிடைத்து உள்ளது.

Related Tags :
Next Story