லடாக், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களைக் காட்டும் புதிய வரைபடம்
லடாக், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களைக் காட்டும் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இந்த சட்டதிருத்தம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்ததையடுத்து கிரிஷ் சந்திர மர்மு மற்றும் ராதா கிருஷ்ணா மதூர் ஆகிய இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லாடாக்கின் கவர்னர்களாக பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவின் புதிய அரசியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
லே மற்றும் கார்கில் ஆகிய இரு மாவட்டங்களும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டதாகவும், அவை தவிர ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்த மற்ற அனைத்து மாவட்டங்களும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கும்.
Related Tags :
Next Story