பீகாரில் குடும்பநல கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்


பீகாரில் குடும்பநல கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Nov 2019 3:39 PM GMT (Updated: 2019-11-04T21:09:03+05:30)

பீகார் மாநிலத்தில் குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

பாட்னா,

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் பகுதியில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் நீதிமன்ற பணியாளர் ஒருவர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மாவட்ட கூடுதல் நீதிபதி அசோக் யாதவ் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போது இந்த துப்பாகிக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story