‘சாத்’ பூஜை கொண்டாட்டத்தால் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்


‘சாத்’ பூஜை கொண்டாட்டத்தால் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
x
தினத்தந்தி 5 Nov 2019 1:50 AM IST (Updated: 5 Nov 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சாத் பூஜை கொண்டாட்டத்தால் ஏரியில் உள்ள மீன்கள்செத்து மிதந்தன.

கொல்கத்தா,

வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘சாத்’ பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நீர்நிலைகளில் ஒன்று கூடும் மக்கள், சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

மேற்குவங்காள மாநிலம் ரவீந்திர சரோவர் ஏரியிலும் கடந்த 2 நாட்களாக மக்கள் இந்த விழாவை கொண்டாடினர். அங்கு ‘சாத்’ பூஜை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து இருந்தது. இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அதையும் மீறி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இந்த பூஜையை நடத்தினர். இந்தநிலையில் ஏரியில் ஏராளமான மீன்களும், ஆமைகளும் செத்து மிதந்தன. பூஜையின் போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய், நெய் மற்றும் பிற பொருட்களும் ஏரியின் மேற்பரப்பில் தேங்கி இருந்தன. இதனாலேயே மீன்களும், ஆமைகளும் இறந்திருக்ககூடும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


Next Story