மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை


மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
x
தினத்தந்தி 6 Nov 2019 3:19 AM GMT (Updated: 2019-11-06T08:49:07+05:30)

மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாஸ்கோ,

இந்தியா-ரஷ்யா இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “உலகம் முழுவதும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகில் அமைதி மற்றும் நிலையான முன்னேற்றம் ஏற்பட அவரது சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற முயற்சி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story