டெல்லியில் காற்று மாசு; முகமூடி அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்


டெல்லியில் காற்று மாசு; முகமூடி அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்
x
தினத்தந்தி 6 Nov 2019 4:14 AM GMT (Updated: 2019-11-06T09:44:20+05:30)

டெல்லியில் காற்று மாசால் தீபாவளி பண்டிகை விடுமுறை நீட்டிப்புக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் இன்று தொடங்கின.

புதுடெல்லி,

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது.  வாகனங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக நேற்று வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காற்று மாசால் தீபாவளி பண்டிகைக்கு பின் நீட்டிக்கப்பட்டு இருந்த விடுமுறை நேற்றுடன் முடிந்தது.  இதனால் பள்ளிகள் வழக்கம் போல் இன்று தொடங்கின.  எனினும், டெல்லியில் உள்ள இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற பிரிவிலேயே இருந்தது.

இதனை முன்னிட்டு, பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் காற்று மாசில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் தங்களது முகங்களை மறைக்கும்படியான முகமூடிகளை அணிந்தபடி செல்கின்றனர்.

Next Story