ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல்


ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல்
x
தினத்தந்தி 6 Nov 2019 5:44 PM IST (Updated: 6 Nov 2019 5:44 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் பாகிஸ்தான்  ராணுவத்தினர் மோட்டார் குண்டுகளை வீசினர். இந்த தக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்தது. அங்கிருந்த  கால்நடைகள் காயமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும்  கடும் மோட்டார் குண்டு தாக்குதல் எல்லையில் வசிப்பவர்களிடையே பீதியைத் ஏற்படுத்தி உள்ளது.

ஹீராநகர் பகுதியில் ரதுவா மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில்  பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் மோட்டார் குண்டு  தாக்குதல் நடத்தியது.

Next Story