ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரெயில்கள்; உத்தரபிரதேசத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் மகான்வா ரெயில் நிலையத்தில் நேற்று ஒரே தண்டவாளத்தில் சத்பாவனா எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் நேருக்குநேர் வந்தன.
லக்னோ,
2 ரெயில்களும் மெதுவாக வந்ததாலும், டிரைவர்கள் உரிய நேரத்தில் கவனித்து விட்டதாலும் ரெயில்களை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொழில்நுட்ப குளறுபடி காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து, ரெயில்களை சரியான பாதையில் மாற்றினர். அதன் பிறகு, போக்குவரத்து சீரடைந்தது.
Related Tags :
Next Story