அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத் + "||" + Whatever the verdict of the Ayodhya case, the people must remain silent - Yogi Adityanath
அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்
அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்தன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற உள்ள நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூசண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு நாளை வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது
மேலும் நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாவதையொட்டி உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டரில், “வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். சட்டம் - ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். மாநிலத்தில் அமைதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையை பேணுவது நம் அனைவரின் பொறுப்பாகும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.