திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயந்திர துப்பாக்கிகளுடன் புதுமண தம்பதிகள்


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயந்திர துப்பாக்கிகளுடன் புதுமண தம்பதிகள்
x
தினத்தந்தி 12 Nov 2019 8:05 AM GMT (Updated: 2019-11-12T13:35:38+05:30)

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயந்திர துப்பாக்கிகளுடன் புதுமண தம்பதிகள் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தி,

நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் தலைவரான பொஹோட்டோ கிபாவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது புதுமண தம்பதிகள் ஏகே-56, எம்-16 போன்ற அதிநவீன துப்பாக்கிகளை, கையில் ஏந்தியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story