உத்தரகாண்டில் நிலநடுக்கம்


உத்தரகாண்டில் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 13 Nov 2019 12:37 AM IST (Updated: 13 Nov 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரவுரா-நச்னி பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியது.

பித்தோராகர் மட்டுமின்றி அல்மோரா, சம்பாவத் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் அங்கு உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.


Next Story