மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பாஜக


மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பாஜக
x
தினத்தந்தி 13 Nov 2019 10:34 AM IST (Updated: 13 Nov 2019 10:34 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது என பாரதீய ஜனதா கூறி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  ஜனாதிபதியின் ஆட்சியை  அமல்படுத்த  கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பாஜகவின்  முக்கிய தலைவர்கள்  நேற்று  பிற்பகல் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர்.

நாரிமன் பாயிண்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டாலும் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தை கட்சி தொடர்ந்து  வைத்திருப்பதாகக் கூறினார்.

"பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் ஒருபோதும் மூடப்படவில்லை, இருப்பினும் அவர்களது மத்திய அமைச்சர்  ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். எங்களைப் பொருத்தவரை, பேச்சுவார்த்தைக்கான கதவு எப்போதும்  திறந்திருக்கும் ”என்று அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மாநில சட்டமன்றத் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், கூட்டணிக்கு தெளிவான  வெற்றியை மக்கள் வழங்கியபோதும்  மாநிலத்தில் ஒரு அரசை  உருவாக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஜனாதிபதியின் ஆட்சியை கவர்னர் விதிக்க வேண்டியது துரதிர்ஷ்டவசமானது. மிக விரைவில் மாநிலத்தில்  ஒரு நிலையான அரசு அமையும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் கூறினார்.
1 More update

Next Story