குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி தோட்டா


குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி தோட்டா
x
தினத்தந்தி 13 Nov 2019 7:44 PM GMT (Updated: 13 Nov 2019 7:44 PM GMT)

குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி தோட்டா கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் குருவாயூரில் உலக பிரசித்தி பெற்ற கிருஷ்ணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது உண்டியலில் துப்பாக்கி தோட்டா ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

9 எம்.எம். ரக கைத்துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் அந்த தோட்டாவை உண்டியலில் செலுத்தியது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story