நுகர்வோர் செலவினம் கடும் வீழ்ச்சி: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

நுகர்வோர் செலவினம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது தொடர்பாக, பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
2017-18-ம் ஆண்டுக்கான நுகர்வோர் செலவின ஆய்வு அறிக்கையை தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டு உள்ளது. இதில் நுகர்வோர் செலவினம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் தேவை குறைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனவும் புள்ளியியல் துறை அலுவலகம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த அறிக்கை கடந்த ஜூன் 19-ந் தேதியே வெளியிடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அதன் பாதக அம்சங்கள் காரணமாக வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி ஜாலம் மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. தனது சொந்த அறிக்கையையே இந்த அரசு மறைத்து உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Tags :
Next Story