கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஓடும் பஸ்சில் கியரை மாற்ற பெண்களை அனுமதித்த டிரைவர் - அதிகாரிகள் நடவடிக்கை


கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஓடும் பஸ்சில் கியரை மாற்ற பெண்களை அனுமதித்த டிரைவர் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 17 Nov 2019 8:45 PM GMT)

கேரளாவில் ஓடும் பஸ்சில் கியரை மாற்ற பெண்களை அனுமதித்த டிரைவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாலக்காடு,

டிரைவர் பஸ்சை ஓட்டிய போது பெண்கள் கியரை மாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து டிரைவர் லைசென்சை பறிமுதல் செய்தனர்.

வயநாடு மாவட்டம் கல்பெட்டா நகரை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

அப்போது இவருடைய இருக்கைக்கு அருகில் 2 இளம்பெண்கள் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். அப்போது டிரைவர் பஸ்சை ஓட்டிய போது இந்த இளம்பெண்கள் கியரை மாற்றியுள்ளனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையொட்டி பஸ்சில் பயணம் செய்தவர்கள் இதை தங்களது செல்போன்களில் படம் பிடித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து பஸ்சை மறித்தனர்.

பின்னர் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் இளம்பெண்களை கியரை மாற்ற அனுமதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய லைசென்சை உடனடியாக பறிமுதல் செய்து 7 மாதங்கள் பஸ்சை ஓட்ட தடை விதித்தனர்.


Next Story