மனைவி மற்றும் அண்ணியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் - தானும் தற்கொலை செய்து கொண்டார்
பீகாரில் மனைவி மற்றும் அண்ணியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாட்னா,
பீகாரின் பாட்னா மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரான விஷ்ணு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி மற்றும் அண்ணியுடன் ஒரு காரில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் காரில் வைத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வெறும் அற்ப காரணத்துக்காக நடந்த இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த விஷ்ணு காரில் வைத்தே தனது மனைவி மற்றும் அண்ணியை தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் அதே துப்பாக்கியால் சுட்டு விஷ்ணுவும் தற்கொலை செய்து கொண்டார். பாட்னா அருகே சைதாபாத் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story