ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? -உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு


ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? -உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 1:14 PM GMT (Updated: 3 Dec 2019 1:14 PM GMT)

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதானார்.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு இதுவரை 5 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும்,  அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா ? என்பது நாளை தெரிந்துவிடும்.

Next Story