தேசிய செய்திகள்

“வாய்மை இறுதியாக வென்று விட்டது” - ப.சிதம்பரம் விடுதலை குறித்து காங்கிரஸ் கருத்து + "||" + Truth finally prevails - Congress comments on the release of P. Chidambaram

“வாய்மை இறுதியாக வென்று விட்டது” - ப.சிதம்பரம் விடுதலை குறித்து காங்கிரஸ் கருத்து

“வாய்மை இறுதியாக வென்று விட்டது” - ப.சிதம்பரம் விடுதலை குறித்து காங்கிரஸ் கருத்து
வாய்மை இறுதியாக வென்று விட்டதாக, ப.சிதம்பரம் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் “இறுதியாக வாய்மை வென்று விட்டது. சத்யமேவ ஜெயதே” என்று கூறியுள்ளது.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சசிதரூர், ப.சிதம்பரத்தின் வக்கீல் அபிஷேக் சிங்வி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மிலிந்த் தியோரா, ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஜாமீன் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.