வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி - கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை


வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி - கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2019 2:28 AM IST (Updated: 5 Dec 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி, கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று மக்களவையில் தனது தொகுதி தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி பேசினார். இதற்காக சிறப்பு குறிப்பு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் முக்கியமாக தனது தொகுதிக்கு உட்பட்ட நிலம்பூரில் இருந்து கர்நாடகாவின் நஞ்சன்கோடு வரை போடப்படும் ரெயில்பாதை பணிகளை விரைவில் முடிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த திட்டத்தை முடிப்பதற்காக கேரள அரசுக்கு உதவுமாறும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார். வயநாடு தொகுதிக்கு அடிக்கடி நேரில் வந்து மக்களின் குறைகளை கேட்டு வரும் ராகுல் காந்தி, அது தொடர்பாக மக்களவையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story